நடிகர் சூரி, மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து, பின் சினிமாவில் நடிகராக வேண்டும் என ஆசையில் சென்னை வந்து பல்வேறு கஷ்டங்களை கடந்து, இன்று முன்னணி காமெடி நடிகர் என்கிற இடத்தை எட்டி பிடித்துள்ளார்.

மதுரை மண்ணின் மைதனான இவர், பல வருடங்களாக நம் பாரம்பரிய விளையாட்டான  ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டவர். 

மேலும் எந்த ஒரு திருவிழா, பண்டிகைகள் என்றாலும், அதனை அம்மா, அண்ணன், தம்பி என குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வார்.

இந்நிலையில் பட வேலைகளில் இவர் பிஸியாக இருந்தாலும் ஆடி மாதம், நடைபெறும் ராஜாக்கூரில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழாவில் சொந்தபந்தங்களுடன் கலந்து கொண்டுள்ளார். 

அப்போது தன்னுடைய சொந்த பந்தம் மற்றும் ஊர் மக்களுடன், இவர் ஒயிலாட்டம் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோ பதிவு: