இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கடந்த 1996ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன். தேசப்பற்று, சமூகத்தில் நடக்கும் அநியாயங்கள் பற்றி எடுத்துரைக்கும் விதமாக இப்படம் வெளியானது.

இதில் கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். நடிகை சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் கதாநாயகியாக நடித்திருந்தனர்.  

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஏற்கனவே எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், ஒரு சில படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டு பின் திடீரென கிடப்பில் போடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம்  ஆரம்பமாக உள்ளது என படக்குழுவினர் அதிரடியாக அறிவித்தனர்.

 இது குறித்து சமீபத்தில் வெளியான தகவலின்படி, இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகிய மூன்று நாயகிகள் இணைந்துள்ளனர். மேலும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

தற்போது இந்தியன்2 படத்தில் வான்டடாக வந்து வாய்ப்பு கேட்டு உள்ளார் சுப்பு பஞ்சு. இது குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, வணக்கம் சார் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.  நீங்கள் எனக்கு இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் அது தனக்கு மிகவும் சந்தோஷம்.  முழுமையான நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் என்று ட்விட் செய்துள்ளார்.