மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற நிறுவனம் முதல் முதலில் தமிழில் 'உன் காதல் இருந்தால்' என்ற படத்தை தயாரித்துள்ளது. தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும்,  அவருடன் சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகிய 3 நாயகிகளும் நடித்துள்ளனர். 

ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ்,  காயத்ரி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.  சாஜித் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மன்சூர் அஹமத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஸ்ரீகாந்த் தேவா மேற்கொண்டுள்ளார். 

ஹாரர் கலந்த நகைச்சுவை படமான இதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த், "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தில் பேயாக நடித்த சந்திரிகா ரவியுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

செம்ம கிளாமர் டிரெஸில் இருக்கும் சந்திரிகா ரவியுடன் போர்வைக்குள் ஒட்டி உரசியும், கட்டி புரண்டும் ஸ்ரீகாந்த் செய்துள்ள ரொமான்ஸ் காட்சிகள் தியேட்டரில் ரசிகர்களை கதிகலங்க வைக்கப்போகிறது. அப்படிப்பட்ட அதிரிபுதிரி கிளிக்ஸ் இதோ...