ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி கொண்டாடிய ஸ்ரீகாந்த்..!

நடிகர் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்து வரும் மிருகா திரைப்பட ஷூட்டிங் கேரளாவில் மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் பிப்ரவரி 28 ஆம் தேதி, ஸ்ரீகாந்துக்கு பிறந்த நாள் என்பதால், ஷூட்டிங் ஸ்பாட்லயே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி உள்ளனர் படக்குழு.

படப்பிடிப்பில் இருந்த அறிமுக இயக்குனர் பார்த்திபன், உதவி இயக்குனர்கள், நடிகர் மற்றும் நடிகைகள் என மொத்த யூனிட்டும் ஸ்ரீகாந்த் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. கேக் வெட்டும் போது படத்தின் கதாநாயகியான நடிகை லட்சுமிராய் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்ய மற்றவர்களும் ஹேப்பி பர்த்டே சொல்ல அன்பு மழையில் நனைந்து உள்ளார் ஸ்ரீகாந்த்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பிறந்த நாள் பரிசாக மற்றொரு இனிப்பான செய்தி ஸ்ரீகாந்துக்கு கிடைத்துள்ளது. அதாவது 2011 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுபவர்களின் பெயர் பட்டியலில் ஸ்ரீகாந்த் பெயரும் இடம் பெற்றுள்ளது என்பதே....பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது, தமிழக அரசு சார்பாக வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

இந்த பட்டியலில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கார்த்தி, பிரசன்னா, பொன்வண்ணன், பிரபு தேவா, சரவணன், ராஜசேகர்,ஆர்.ராஜிவ், பாண்டு,ஆர்.பாண்டியராஜன், சசிகுமார், சித்ராலட்சுமண, நகைச்சுவை நடிகர்கள் சந்தானம், சூரி, எம்.எஸ் பாஸ்கர், தம்பிராமயைா, சிங்கமுத்து, உள்ளிட்டவர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் பிறந்த நாள் கொண்டாட்டம், இன்னொரு பக்கம் கலைமாமணி விருது என ஒரே மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளதால், குஷியாக உள்ளார் ஸ்ரீகாந்த். மேலும் ஸ்ரீகாந்த் நடித்து விரைவில் திரைக்கு வர உள்ள மிருகா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.