இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி நடிப்பில் வெளியான ‘மாமன்’ படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் ‘மாமன்’. இந்தப் படத்தில் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், சுவாஸிகா பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்து இருந்தார்.

ஆறு வயது சிறுவனுக்கும் அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை இந்த படம் உணர்வுப்பூர்வமாக பேசியிருந்தது. இதுவரை படம் ரூ.30 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Maaman - Deleted Scene #2 | Soori | Aishwarya Lekshmi | Prasanth Pandiyaraj | Hesham Abdul Wahab