actor soori home function in madurai
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் காமெடியனாக நடித்து வருபவர் சூரி. இவர் எந்த ஹீரோவுடன் நடித்தாலும் அவர்களுடன் நல்ல நட்பையும் வளர்த்துக்கொள்வார். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் இவருக்கு சிறந்த நண்பன் என்றும் கூறலாம்.
இந்நிலையில் நேற்று சூரியின் சொந்த ஊரான மதுரையில் இவருடைய மகள் மற்றும் மகனுக்கு முடியெடுத்து காது குத்தும் விழா நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு நாள் மும்பே சென்று, தன்னுடைய குடும்பத்தில் எப்படி விஷேசம் நடந்தால் பங்கு எடுத்தகொள்வோமோ அதே போல் நடந்துக்கொண்டுள்ளார். 
மேலும் நடிகர் விக்ராந்த், இயக்குனர் சுசீந்திரன், இயக்குனர் பொன்ராம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு விழாவை சிறைப்பித்துள்ளனர். பொதுவாக திருமணம் போன்ற பெரிய விசேஷங்களில் தான் நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் கலந்துக்கொள்ளும் நிலையில் காமெடி நடிகர் சூரியின் பிள்ளைகள் காது குத்து விசேஷத்தில் கலந்துக்கொண்டுள்ளது பிரமிப்பாக பார்க்கப்படுகிறது.
