தோனியின் வின்னிங் ஷாட் பார்த்து மெர்சலான பிரபல நடிகர்... உற்சாகத்தில் குழந்தை போல் துள்ளிக்குதிக்கும் வீடியோ
MS Dhoni : மும்பைக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சென்னை அணி வெற்றிபெற்றதை பிரபல நடிகர் துள்ளிக்குதித்து கொண்டாடி உள்ளார்.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பி சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 51 ரன்கள் குவித்தார். சென்னை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய இளம் வீரர் முகேஷ் சவுத்ரி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து 156 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை அணி களமிறங்கியது.
ஆரம்பம் முதலே ரன் அடிக்க முடியாமல் திணறி வந்த சென்னை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்து தடுமாறியது. கடைசி கட்டத்தில் பிரிட்டோரியஸ் அதிரடி காட்டி ஆட்டமிழக்க சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை உனாத்கட் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.
இதையடுத்து எஞ்சியுள்ள 4 பந்துகளையும் எதிர்கொண்ட தோனி 6, 4, 2, 4 என அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி சென்னை அணியை வெற்றியடைய செய்தார். 1 பந்துக்கு 4 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழலில் கூலாக பவுண்டரி அடித்து தோனி ஜெயிக்க வைத்ததை பார்த்து மெர்சலான நடிகர் சூரி, டிவி முன்பு குழந்தைபோல் துள்ளிக்குதித்து சென்னை அணியின் வெற்றியை கொண்டாடி உள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்.... Thalapathy 66 : தளபதி 66-ல் விஜய்க்கு அண்ணனாக நடிக்க மறுத்த 2 காதல் மன்னர்கள்... ஏன் தெரியுமா?