இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 439 ஆக அதிகரித்துள்ளது. 377 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  எனவே தான் நேற்றுடன் 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவு பெற்ற நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பாரத பிரதமர் மோடி அவர்கள் நீட்டித்துள்ளார். 


கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏராளமான தொழில் அதிபர்கள், திரைத்துறையினர் உள்ளிட்டோர் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். சந்திரமுகி, அருந்ததி உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இந்தி நடிகர் சோனு சூட், தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வருகிறார். சினிமாவில் வில்லனாக இருந்தாலும் கொரோனா காலத்தில் இவர் செய்யும் செயல்கள் அனைத்தும் ஹீரோ லெவலுக்கு உயர்த்திவிட்டது. 


இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!

நமக்காக தங்களது உயிரை பணயம் வைத்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காக மும்பையில் உள்ள தனது 6 மாடி ஓட்டல் ஒன்றை இலவசமாக கொடுத்திருந்தார். மும்பை முழுவதும் உள்ள மருத்துவ பணியாளர்கள் அங்கு வந்து ஓய்வெடுத்து கொள்ளலாம் என்று அன்புடன் அழைப்புவிடுத்தார். சோனுவின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு அதிரடி காரியத்தை செய்து காட்டி அசத்தியுள்ளார். 


ஆமாங்க... கொரோனா ஊரடங்கால் வேலையிழந்து தவிக்கும் 45 ஆயிரம் பேருக்கு தினமும் உணவு வழங்க சோனு சூட் ஏற்பாடு செய்துள்ளார். அந்தேரி, ஜோகேஸ்வரி, ஜூஹு, பாந்த்ரா ஆகிய பகுதிகளில் வசிக்கும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களுக்கு உணவளித்து வருகிறார். அதற்காக சக்தி அன்னதானம் என்ற அமைப்பையும் தொடங்கியுள்ள சோனு சூட், வேலையில்லாத கூலித்தொழிலாளர்கள் யாரும் உணவின்றி வாடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார். 


இதையும் படிங்க: வெளிநாட்டில் இருக்கும் விஜய் மகனின் தற்போதைய நிலை என்ன?... உண்மை நிலவரம் இதுதான்...!

அதுமட்டுமின்றி மே 3ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியான உடனேயே அம்புஜ் வாடி, அஸ்மி நகர், மலாட் மல்வானி ஆகிய பகுதிகளில் கூலித்தொழிலாளர்களுக்கு தேவையான மளிகை பொருட்களை ஒரு சரக்கு வாகனம் முழுவது நிரப்பி அனுப்பிவைத்துள்ளார்.நாடு இருக்கும் நெருக்கடி நிலையில் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ள சோனு சூட்டிற்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.