சூர்யா தயாரிப்பில்,  அவரது மனைவி ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டது. திரையரங்க உரிமையாளர்கள் சிவகுமார் குடும்பத்தினர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

சூர்யாவின் சூரரைப்போற்று உள்பட கார்த்தி, ஜோதிகா மற்றும் அவரது குடும்பத்தினர் நடித்த திரைப்படங்களை திரையிட மாட்டோம் என்றும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இன்று சென்னை தி நகரில் உள்ள திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறும்போது ’நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் நடிப்பில் வெளிவரும் எந்த படத்தையும் திரையரங்குகளில் திரையிடப் போவதில்லை.

 

அரசின் வழிகாட்டுதலோடு திரையரங்குகளை திறக்க தயாராக இருக்கிறோம். ஓடிடியில் படம் வெளியாவதால் எங்களுக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது. ஆனால், அவ்வாறு வெளியாகும் படங்கள் தோல்வியை தழுவி இருப்பது மக்கள் திரையரங்கில் தான் படங்களை பார்க்க விரும்புகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என் அவர் த்ரிவித்தார். திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது