85 ரூபாயில் வாழ்ந்த வாழ்க்கை..! நடிகர் சிவகுமார் போட்டுடைத்த ரகசியம் ..!

நடிகர் சூர்யா...கார்த்திக் இவர்களுக்கு முன்னாடியே தமிழ் திரை உலகில் ஒரு கலக்கல் மன்னனாக இருந்தவர்,  இன்றளவும் மக்கள் மனதில் தனக்கென மிக சிறந்த இடத்தை பிடித்து உள்ளவர் தான் சகோதர  நடிகர்களின் அப்பாவும் நடிகருமான சிவகுமார்

இவர், இப்போது அனைத்து வசதி வாய்ப்புகளுடன் இருந்தாலும், அவர் கடந்து வந்த பாதை, வறுமையில் எப்படி பாடுபட்டு படித்து இந்த அளவிற்கு முன்னேறி உள்ளார் என்பதை அவரே மாணவர்கள் முன்  மனம் திறந்து பேசி உள்ளார்.

நடிகர் சிவகுமார் நன்கு படிக்கும் திறமை வாய்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, தன்னுடைய 100 ஆவது படத்தின் போது அறக்கட்டளை ஒன்றை துவங்கினார்.

கடந்த 39 ஆண்டுகளாக இந்த அறக்கட்டளையை நடத்தி வரும்  சிவகுமார், இதன் மூலம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும்  மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்

இந்த ஆண்டுக்கான விழாவில், 21 மாணவ மாணவிகள்  பயன்பெற்றனர்.

அப்போது பேசிய நடிகர் சிவகுமார், தான் சந்தித்த வறுமையின்  பக்கங்களை மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது,

"வாழ்கையில் எவன் ஒருவனுக்கு தேவை குறைவோ அவனே..உண்மையில் செல்வந்தன் என நடிகர் சிவகுமார் மாணவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தி உள்ளார்.

சென்னையில், ஒரு மாதத்தில் ரூ.85 கொண்டே வாழ்ந்த நான், இந்த உலகத்தை சுண்டு விரலால் சுழற்றுவேன் என்ற தைரியத்தில் வாழ்ந்தேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

இப்போது மகன்கள் கோடி கணக்கில் சம்பாதிக்கிறார்கள்...ஆனால் சுண்டு விரல் அதே அளவில்  தான் உள்ளது..அதாவது  சுண்டு விரல் சிறியதாக தான் உள்ளது எனவும்  தெரிவித்து இருந்தார்.  

வாழ்கையில் நாம் இரண்டு விஷயங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்...

ஒழுக்கம்

மற்றும் கல்வி  இவை இரண்டும் இருந்தால் வாழ்கையில் எங்கிருந்தாலும் ஜெயித்து விடலாம். அதில் மிக முக்கியமானது நம்பிக்கை..எந்த நேரத்திலும் நம்பிக்கை இழக்காமல் ஒழுக்கத்துடன் படித்த படிப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையை சிறப்பாக வாழலாம்.

இதே போன்று உடல் நலத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்..அதற்காக நான் தினமும் யோகா செய்து வருகிறேன் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.