சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை பலருக்கும் உள்ளது. அதிலும் சிலர் ஹீரோவாக ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தாங்களே ஒரு பட கம்பெனி துவங்கி, படத்தை தயாரித்து நடிக்கிறார்கள். 

அந்த வகையில் ஒரு வருடத்திற்கு மட்டும் தோராயமாக,  200 படத்திற்கும் அதிகமான படங்கள் வெளியாகிறது. ஆனால் இப்படி வெளியாகும் படங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருப்பவை 20 வத்திற்கும் குறைவான படங்களே. 

இப்படி சிறு பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட, 'பயபுள்ள' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிவா.  திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை பூர்வீகமாக கொண்ட இவர், திரைப்படத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரமாக சென்னை வைத்து தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கினார்.

சென்னை ராமாவரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். 'பயபுள்ள' படத்தின் ஹீரோவாக நடித்தாலும், அந்த படம் தோல்வி அடைந்ததால், தற்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சென்னையில், தங்கியுள்ள வீட்டின் எதிரே வசித்து வந்த என்ஜினியரிங் படித்த பட்டதாரி பெண்ணை காதலித்து ஏமாற்றி அவருடன் மாயமாகியுள்ளார்.

இது குறித்து பெண்ணின் பெற்றோர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சிவாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி  மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இன்ஜினியரிங் படித்த பெண்ணை ஆசை வார்த்தைகள் கூறியும், நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டியும் மயக்கி காதல் வலையில் வீழ்த்தியது தெரியவந்தது.

ஏற்கனவே திருமணமான சிவா, தங்கள் மகளை மயக்கி அழைத்துச்சென்றதால்,மகளின் எதிர்காலமே கேள்வி குறியாக மாறி உள்ளதாகவும் விரைந்து தங்களுடைய மகளை மீது தரவேண்டும் என பெற்றோர் கூறியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது திரையுலகில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.