சிம்பு கொடுக்குற குடைச்சல் பத்தாதுன்னு, அவரு தம்பியும் வர்றாராம்: குய்யோ முறையோன்னு அழும் கோடம்பாக்கம். 

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகத்தான் காமெடி மனிதராய் பார்க்கப்படுகிறார் டி.ஆர். ஆனால் அவர் அந்த காலத்திலோ அஷ்டாவதானி! டி.ராஜேந்தர் எனும் பெயருடன், கதை, திரைக்கதை, பாடல்கள், இசை, வசனம், இயக்கம், கேமெரா, நடிப்பு என எல்லாவற்றையும் சேர்த்து கவனிப்பார். ஒவ்வொரு படமும் நூறு நாட்களைத் தாண்டி நச்சுன்னு ஓடும். பாட்டு, வசனம் என எல்லாமும் வருடக்கணக்காய் பேசப்படும். 

இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக கோடிகளைச் சேர்த்தார் டி.ராஜேந்தர். அவரது மகனான சிம்பு, கோலிவுட்டினுள் என்ட்ரி போட்டபோது பெரிய ஹீரோக்களே சற்று ஜெர்க் ஆனார்கள். காரணம், புலிக்குட்டி பெரிதாய் பாயுமே, மேலும் ஆளும் சிறப்பான லுக்கில் இருந்ததும் காரணம். 
ஆனால் சிம்புவின் விஷயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதை பாமர ரசிகனும் அறிவான். அவர் இயக்குநரின் ஹீரோவாக இருந்த ‘கோயில், தொட்டி ஜெயா, செக்கச் சிவந்த வானம், விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா!’ ஆகிய படங்கள் மரண ஹிட்டடித்தன. ஆனால் இயக்குநர்களை அவர்  கதறவிட்ட படங்கள் அத்தனையும் முரட்டு மொக்கையாகிக் கொண்டிருக்கின்றன. 

சிம்புவை புக் பண்ணனும் என்றாலே தெறித்து ஓடுகின்றனர் தயாரிப்பாளர்கள். ஆனாலும் அவங்க அப்பா செய்த புண்ணியமோ என்னவோ இன்னமும் அவருக்கென ஒரு வட்டாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது சற்றே பீதியுடன். 

இந்த நேரத்தில் சிம்புவின் தம்பியான குறளரசனை ஹீரோவாக்கிட அவரது குடும்பம் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட குறள், ஹீரோ ஆவதற்குரிய ஃபிட்னஸ் விஷயத்தில் எந்த அக்கறையுமில்லாமல்தான் பிரம்மாண்டமாக இருக்கிறார். அவருக்கு ஃபிட்னஸ் ஐடியா கூறாமல், தயாரிப்பாளர்களை சுண்டி இழுக்க துவங்கியிருக்கிறது குடும்பம். 

ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் சில தயாரிப்பாளர்கள் பேசிப் பார்த்தபோது ‘ரெண்டு கோடி வேண்டும். அதுவும் சிங்கிள் பேமண்ட்ல வேணும்’ என்று சிம்பு, குறளின் அம்மாவும், திருமதி டி.ஆருமான உஷா திகிலடிக்க வைத்தாராம். 

’என்னய்யா பிரச்னை இந்த குடும்பத்துக்கு? அவங்களை அவங்களே கெடுத்துக்குறாங்க!’ என்று தெறித்திருக்கிறார்கள். இதுக்கு டி.ஆர்.ரை ஹீரோவாக்குனா, கவலை மறந்து சிரிக்குறதுக்காக கும்பல் கும்பலா போய் உட்காரலாம்.