அவரால் பாதிக்கப்பட்ட மற்ற தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து அவரை புதுபடங்கள் எதிலும் கமிட் ஆக விடாமல் முடக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அவைகளுக்கு பதில் சொல்ல டி.ஆர். விரும்பாத சூழலில் ஒரு சில கூட்டங்களில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டார்.
நாம் இரு தினங்களுக்கு முன்பே எழுதியிருந்தபடி, நடிகர் சிம்பு 40 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப தரிசனம் செய்ய மாலை அணிந்து விரதத்தை நேற்று துவங்கினார். இந்நிகழ்வில் ‘மாநாடு’படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கலந்துகொண்டார்.
சுமார் இரு மாதங்களுக்கு முன்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த மாநாடு படம் கருத்து வேறுபாடுகளால் கைவிடப்பட்ட பிறகு சிம்பு தமிழ் சினிமாவிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவரால் பாதிக்கப்பட்ட மற்ற தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து அவரை புதுபடங்கள் எதிலும் கமிட் ஆக விடாமல் முடக்கும் வேலைகளில் ஈடுபட்டனர். தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன. அவைகளுக்கு பதில் சொல்ல டி.ஆர். விரும்பாத சூழலில் ஒரு சில கூட்டங்களில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டார்.
இந்நிலையில், பார்ட்டி, கூத்து கொண்டாட்டம் என்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த சிம்பு, இனியும் இப்படியே இருந்தால் நமக்கு எண்ட் கார்டு போட்டு விடுவார்கள் என்ற ஞானம் பெற்று 40 நாள் விரதம் மேற்கொண்டு நேற்று ஐயப்ப சுவாமிகள் தரிசனத்துக்கு மாலை போட்டார். அந்நிகழ்ச்சியில் சும்புவுடன் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தில் நடிக்க சிம்பு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், அவரது ஐயப்ப தரிசனம் முடிந்தவுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் இனியொரு புதிய சிம்புவை தமிழ் சினிமா பார்க்கும் என்றும் உத்தரவாதம் தருகிறார். இதே சிம்பு சில மாதங்களுக்கு முன்பு வேறொரு கருப்பு நிற ஆடை அணிந்து பெரியார் குத்து பாடலை வழங்கினார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 6, 2019, 10:33 AM IST