தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று நடிப்பை தாண்டி பின்னணி பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர் என தன்னுடைய திறமையை பலவற்றிலும் வெளிப்படுத்தி வருவர் சிம்பு. சில வருடம் சொந்த பிரச்சனை காரணமாக இவர் திரையுலகை விட்டு ஒதுங்கி இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள மவுசு கொஞ்சம் கூட குறையவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக உடல் எடை கூடி காணப்பட்ட சிம்பு, ஏற்கனவே கடந்த ஆண்டு லண்டன் சென்று தன்னுடைய உடல் எடையை குறைத்து சகோதரன், குறளரசன் திருமணத்தில் கலந்து கொண்டார்.

இதை தொடர்ந்து, மீண்டும் சற்று உடல் எடை போட்டார். எனவே கொரோனா லாக் டவுன் நேரத்தில், கேரளா சென்று உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக திரும்பி வந்துள்ளார். எனவே இவரது புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ எப்போது வெளிவரும் என இவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது சிம்புவே தன்னுடைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில், சிம்புவின் மாஸ் லுக் வெளிப்பட்டதோடு... அவர் மேற்கொண்ட பயிற்சிகளும் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் சமீப காலமாக சிம்பு அதிக கடவுள் பக்தி கொண்டவராகவும் மாறியுள்ளார். முகத்தில் முகமூடியுடன், திருப்பதி ஏழுமலையான் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்றவற்றில் முகமூடியுடன் சிம்பு சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.