நடிகர் வம்புத்தம்பி சிம்பு மீண்டும் ஒரு மாபெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பே துவங்குவதாக இருந்து அவருக்காக காத்திருந்த ‘மாநாடு’படத்தில் அவர் நடிக்கிறாரா இல்லையா என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

‘மிக மிக அவசரம்’படத்தின் இயக்குநரும் பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சியின் தயாரிப்பில், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘மாநாடு’படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. சிம்பு உடம்பைக் குறைக்க லண்டன் போனது, தம்பி கல்யாணம், திடீரென்று முன்னாள் காதலியின் ‘மஹா’ ஷூட்டிங்கில் கலந்துகொண்டது என்று கண்ட கண்ட காரணங்களைச் சொல்லி இப்படத்தின் படப்பிடிப்பை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார் சிம்பு.

அடுத்து நடந்த ஒன்றிரண்டு பஞ்சாயத்துகளுக்குப் பின்னர் ஊட்டியில் இம்மாதம் 7ம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்க இருந்த நிலையில், வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவதுசனி,ஞாயிறுகளில் தான் படப்பிடிப்பு வர முடியாது .ஷூட்டிங்கை அதற்கேற்ற வகையில் பிளான் பண்ணுங்கள்’ என்று நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசியிருக்கிறார் சிம்பு. அவுட்டோரில் தொடர்ந்து எப்படி ஒவ்வொரு வாரமும் லீவு கொடுப்பது என்று அதிர்ந்த தயாரிப்பாளரும் இயக்குநரும் கேள்வி கேட்க, தன்னுடைய 35 வருட சர்வீஸில் மணிரத்னம் படத்துக்குத் தவிர எந்தப் படத்துக்க்ப் போட்டதில்லை என்று தெனாவெட்டாக பதில் அளிக்கிறாராம். ஏற்கனவே சிம்புவின் இப்படிப்பட்ட நடவடிக்கையால் நாசமாய்ப் போன தயாரிப்பாளர்களின் பட்டியல் ஞாபகத்துக்கு வருகிறது.