"அங்கிள் அன்புமணி ராமதாசுடன்" விவாதிக்க தயார்...! அதிரடி  கிளப்பும் சிம்பு..!  

அங்கிள் அன்புமணி ராமதாசுடன் விவாதிக்க தயார் என நடிகர் சிம்புவீடியோ பதிபவை வெளியிட்டு உள்ளார்

நடிகர் சிம்பு பற்றி அவ்வப்போது சில சர்ச்சை பேச்சுக்கள் வருவது உண்டு. இந்நிலையில் அரசியல் சார்ந்த கதைக்களம் கொண்ட  படமாக எடுக்கப்பட்டு வரும் படம் மாநாடு. இதில் சிம்பு அரசியல்  சார்ந்த ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் அரசியல் கதைக்களம் கொண்டது என்பதால், சிம்பு  அரசியலுக்கு வர அஸ்திவாரம் போடுகிறார் என விமர்சனங்கள் வர  தொடங்கியது

பின்னர் இது குறித்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் நடிகர் சிம்பு.. அதில்..

"தான் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும் அதே வேளையில் படத்தில் நான் அரசியல் வாதியாக  நடிப்பேன்.... இது குறித்து பல விமர்சனம் எழலாம்... அவர்களுடன் நான் நேருக்கு நேர் விவாதிக்க தயாராக உள்ளேன்.. குறிப்பாக  சமீபத்தில் வெளிவந்த சர்க்கார் படம், அதற்கு முன்னதாக பாபா  படம் என பல படங்கள் சர்ச்சைக்கு உள்ளானது. எனவே மாநாடு படமும் அதே போன்று விமர்சனத்திற்கு  உள்ளானால் நான்  அவர்களுடன் நேருக்கு நேர் விவாதம் செய்து சொல்ல வேண்டிய  கருத்தை சொல்ல தயாராக உள்ளேன்

குறிப்பாக அங்கிள் அன்புமணி ராமதாஸ் சர்க்கார் படத்தில இடம் பெரும் புகைபிடிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்... அதுமட்டுமில்லாமல், அவர் ஏற்கனவே விவாதம் செய்ய தயார்  என குறிப்பிட்டு இருந்தார்.....எனவே அவரே சொல்லட்டும் எங்க எப்போ...என்னிக்குனு...அன்று நான் நேரில் அமர்ந்து விவாதம்  செய்ய தயார் என்று நடிகர் சிம்பு தெரிவித்து உள்ளார்.