பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் மகா கோபக்காரராக வலம் வந்தவர் மகத். இவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்தை காதலிப்பதாக வதந்திகள் பரவ, திரையிலும் அப்படித்தான் இருவரும் நடந்துகொண்டனர். இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டுடன் வெளியே வந்த மகத், முதலில் சந்தித்தது தனது காதலி பிராச்சியைத் தான். 2012ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சியை நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த போது மகத் காதல் வயப்பட்டுள்ளார்.

மகத் - பிராச்சி காதலுக்கு இருவீட்டாரும் சம்மதித்ததை அடுத்து கடந்த ஏப்ரம் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து இவர்கள் திருமணம் மாமல்லபுரம் அருகே உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் இன்று காலை நடந்தது. இதில் மகத்தின் நெருங்கிய நண்பரான சிம்பு பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. 

நடிகர் சிம்புவின் வல்லவன், காளை ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்த மகத், மங்காத்தா படத்தில் தல அஜித்துடன் நடித்ததின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் சிம்புவுடன் அன்பானவன், அடங்காதவன், அசராதவன், வந்தா ராஜாவாத்தான் வருவேன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன், இவன் தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக மகத் திருமணத்தில் பட்டு, வேட்டி சட்டையில் கூலிங்கிளாஸ் சகிதமாக படு மாஸாக கலந்து கொண்ட சிம்புவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது.