பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் அமீர், பாரதிராஜா, கே எஸ் ரவிக்குமார், சித்தார்த், நடிகை ஆண்ட்ரியா, இயக்குனர் மற்றும் நடிகர் சமூத்திர கனி  உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக்கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பேசும் போது, பேரன்பு படத்தை இயக்கிய ராம் தான் இனி அனைத்து இயகுநர்களுக்கும் குரு என்று  தெரிவித்து இருந்தார்

இவரை தொடர்ந்து சத்யராஜ், சித்தார்த், சமுத்திரகனி என அனைவரும்  இந்த படத்தை பற்றி புகழ்ந்து பேசினர்

பின்னர் பேசிய சித்தார்த் மிகவும் ஜாலியாக சில விஷயங்களை  அனைவரும் முன் போட்டுடைத்தார்.

அதாவது தற்போதைய காலக்கட்டத்தில் இயக்குனர்களே பட கதாநாயகனாக நடிக்கும் நிலை உருவாகி உள்ளது..

இது பற்றிய சித்தார்த், மிகவும் நகைச்சுவையாக "நான் எந்த பட விழாவிற்கு சென்றாலும் என் அப்பா, நிகழ்ச்சியில் நீ என்ன பேசின என  கேட்பார். நானும் சொல்வேன்..அந்த வகையில் இன்னிக்கு என்ன  சொல்ல போறேன் என்றால்,  இப்ப வரக்கூடிய படங்களில் எல்லாம் இயக்குனர்களே ஹீரோவாக நடிக்க தொடங்கி விட்டனர்....அப்படி என்றால் ஹீரோ எல்லாம் என்ன செய்வார்கள்.. எனவே, இயக்குனர்கள் எல்லாம் கொஞ்சம் அமைதியாக இருங்க....படத்தை மட்டும் நீங்க இயக்குங்கள்.. நடிக்க நாங்க இருக்கோம் என மிகவும் நகைச்சுவையாக பேசினார்.

சித்தார்த் இவ்வாறு பேசும் போது, நிகழ்ச்சியின் மேடையில் அமர்ந்து இருந்த சமுத்திர கனி மிகவும் சிரித்துக் கொண்டே இருந்தார்.

அதற்குள் டைம் அப் என்று சொன்னவாறே அவரை இருக்கையில் அமர  வைத்தனர்.

பேரன்பு படத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்கப்படாத காட்சிகள் இடம் பெரும் என்றும் கூறி, மக்கள் மனதில் இந்த படம் குறித்து ஒரு   பெருத்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.