actor sidharth scolding trump

பொதுவாக தென்னிந்திய திரையுலகைச் சேர்த்த நடிகர்கள், தமிழகத்தின் அரசியல் குறித்து கருத்துகள் தெரிவிப்பதையும், திட்டுவதையும் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது நடிகர் சித்தார்த் அமெரிக்க அதிபர் டிரம்பையே திட்டியுள்ளார்.

ஏற்கனவே சித்தார்த் தமிழகத்தில் அரங்கேறி வரும் அரசியல் குறித்து, சமூக வலைத்தளத்தில் கூறியிருக்கிறார். சமீபத்தில் கூட 2ஜி வழக்கு பற்றி ட்விட்டரில் அவர் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது அமெரிக்க அதிபரையும் விட்டு வைக்கவில்லை. சித்தார்த் இப்படி இவரைத் திட்டக் காரணம் டிரம்ப் போட்ட ஒரு ட்விட்... 

அதில் பனிப்பொழிவு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவதால், குளோபல் வார்மிங்கை பல டிரில்லியன் டாலர்கள் செலவழித்து தடுக்காமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்' என குறிப்பிட்டிருந்தார். 

இதை பார்த்துவிட்டு, கோபமான நடிகர் சித்தார்த் "அறிவே இல்லாத தத்தி" என திட்டியுள்ளார்.

Scroll to load tweet…