பிரபல நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் நேற்று இரவு திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர், ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

36 வயதாகும் நடிகர் சேதுவிற்கு, உமா என்கிற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். காமெடி நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர், சந்தானத்தால் தான் திரையுலகில் நடிகராகவும் அறிமுகமானார்.

இவரின் முதல் படம் வெற்றி பெற்றாலும், திரைப்படத்தை விட தான் செய்து வந்த மருத்துவ திரையில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். அதே நேரத்தில் திரையுலகில் உள்ள பல முன்னணி பிரபலங்களும் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இவரை தான் அணுகி வருகிறார்கள்.

இவரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படும் நிலையில், கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக, 144 தடை போடப்பட்டுள்ளதால், இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மிகவும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இவருடைய உடலில் புகைப்படம் தற்போது வெளியாகி நெஞ்சை உலுக்கும் விதத்தில் உள்ளது.