சமீபத்தில் பிரேம் ஜியை வைத்து சத்திய சோதனை என்ற படத்தை இயக்கியுள்ள சங்கையா, தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோவாக செந்திலை அறிவித்துள்ளார். 

தற்போது தமிழ் சினிமாவை வடிவேலு, விவேக், சூரி, யோகிபாபு, சந்தானம் என எத்தனையோ காமெடி நடிகர்கள் கலக்கினாலும் என்றுமே காமெடி ஜாம்பவான்கள் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் என்றால் அது கவுண்டமனி - செந்தில் மட்டுமே. 80, 90களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி கூட்டணியாக கவுண்டமனி - செந்தில் கூட்டணி அமைந்தது. குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியை இன்று பார்த்தாலும் விழுந்து விழுந்து சிரிக்காதவர்களே கிடையாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அப்படி கிட்டதட்ட 15 வருடங்கள் தமிழ் சினிமாவை ஆட்டிப்படைத்த வெற்றி கூட்டணியில், கவுண்டமனி சில படங்களில் ஹீரோவாக கூட நடித்திருக்கிறார். ஆனால் செந்திலுக்கு அப்படியொரு வாய்ப்பு அமையவே இல்லை. சுமார் 250 படங்களுக்கும் மேல் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்த செந்திலுக்கு தற்போது தான் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 2017ம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் சுரேஷ் சங்கையா. விதார்த், ரவீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதோடு, திரையுலகினரின் கவனத்தையும் ஈர்த்தது. 

சமீபத்தில் பிரேம் ஜியை வைத்து சத்திய சோதனை என்ற படத்தை இயக்கியுள்ள சங்கையா, தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோவாக செந்திலை அறிவித்துள்ளார். சுரேஷ் சங்கையாவின் சத்திய சோதனை படத்தை தயாரித்த சமீரா பரத்ராம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். இன்று பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதற்கான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.