கடந்த வரம், அஜித் ரசிகர்கள் 100 பேர் பாஜகவில் இணைந்தனர். அப்போது தமிழிசை மிகவும் பெருமையோடு, அஜித் ரசிகர்கள் மோடியின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார். 

இதனை தொடர்ந்து மறு தினமே அஜித் தரப்பில் இருந்து அதிரடியாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் குறிப்பாக  என்னுடைய பெயரையும் ரசிகர்களின் பெயரையும் யாரும் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என கூறப்பட்டிருந்தது. 

மேலும் அந்த அறிக்கையில், அஜித் எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபட ஆர்வம் இல்லை திட்டவட்டமாக கூறி இருந்தார். மேலும் தனக்கும் அரசியலுக்கும் உள்ள தொடபு என்றால், ஒரு சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பது மட்டுமே என்பதையும் விளக்கி இருந்தார். 

அதே போல், நான் என் ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ எப்பொழுதும் நிர்பந்தித்தது இல்லை. நிர்பந்திக்கவும் மாட்டேன். தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலக்க இதுவும் ஒரு காரணம் என்று கூறி இருந்தார். 

இந்நிலையில் அஜித்தின் இந்த அறிக்கைக்கும் "அந்த அறிக்கையில்  அரசியலுக்கு வர மாட்டேன் என தெளிவாக கூறி இருந்ததை பலரும் பாராட்டி வந்த நிலையில்... நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் தற்போது பாராட்டியுள்ளார். 

மேலும் அந்த அறிக்கையில் மற்ற நடிகர்கள் அதோ வரேன்... இதோ வரேன்...  என மழுப்பாமல் அறிக்கை விட்டதற்கு வாழ்த்துக்கள்.  ஆனால்  அந்த அறிக்கையில் என்னுடைய கட் அவுட் மற்றும் பேனர்களுக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டாம் என கூறியிருக்க வேண்டும் எனவும் அஜித்துக்கு அட்வைஸ் செய்துள்ளார்.