ஒருசில வெற்றி படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் சவி சிது, தற்போது வாட்ச்மேன் வேலைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இயக்குனர், அனுராக் காஷ்யப் இயக்கிய படங்களில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகர் சவி சிது.   பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். 

இவருக்கு கடந்த சில வருடங்களாக சரிவர பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இவர் வாட்ச்மேன் வேலைக்கு செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள இவர், குடும்ப கஷ்டத்தில் இருந்த எனக்கு தற்போது உடல்நலம் சரியில்லை.  தொடர்ந்து என் அம்மா, அப்பா, மனைவி, என மூவரும் இறந்தனர். இதனால் தற்போது தனிமையில் வேதனைப்பட்டு வருவதோடு, பட வாய்ப்புகளும் இல்லாமல் பாதுகாவலர் வேலையை செய்து வருகிறேன் என உருக்கமாக கூறியுள்ளார்.

திரைப்படத்தில் நடிக்கும் ஆர்வம் தற்போதும் இருப்பதால், நிச்சயம் பணம் சம்பாதித்து, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்டு நடிப்பேன் என கூறியுள்ளார்.