பிரபல நடிகர் சத்யராஜின் சகோதரி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவத்தால் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். 

பிரபல நடிகர் சத்யராஜின் சகோதரி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவத்தால் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், பிரபல நடிகர் சத்யராஜின் தங்கையான கல்பனா மன்றாடியார், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை (நேற்று) உடல் நலக்குறைவு உயிரிழந்துள்ளார் அவருக்கு வயது 66.

கல்பனா தன்னுடைய மகன் ஏ.மகேந்திரன் என்பவருடன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தில் வசித்து வந்துள்ளார்.கடந்த ஒரு வாரமாக உடல்நிலை சரியில்லாமல் இவர் இருந்ததாக நடிகருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகிறது. எனவே, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை இவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இவரது இறுதி சடங்குகள் இன்று நடைபெறும் என கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், ஹீரோ என படிப்படியாக வெற்றி கண்டவர் சத்யராஜ். இந்திய அளவில் பேசப்பட்ட பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் கூட சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. சத்யராஜ் மகன் சிபிராஜ் கோலிவுட்டில் நாயகனாக நடித்து வருகிறார். மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். திரையுலகினரால் நன்கு அறியப்பட்ட இவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த இழப்புக்கு, பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.