பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செயற்கை சுவாசக் கருவிகளுடன் எஸ்.பி.பி. தம்ஸ் அப் காட்டும் போட்டோ வெளியாகி வைரலானது. இதையடுத்து கடந்த 14ம் தேதி முதல் எஸ்.பி.பி. உடல் நிலை கவலைக்கிடமானது. 

 

இதையும் படிங்க:  “மெர்சல்” படத்தில் நடிக்க மறுத்தது ஏன்?... முதன் முதலாக மனம் திறந்த ஜோதிகா...!

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலமுடன் திரும்ப வேண்டுமென பிரார்த்தித்து வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூட, எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அவர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி ஆகியவற்றின் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையை நிபுணர் மருத்துவர் குழு கூர்ந்து கவனித்து வருகிறது. அவரது vital parameters தற்போது திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தது. 

இதனிடையே இன்று  (20-8-2020(வியாழக்கிழமை))  மாலை 6 மணிக்கு  எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு அவர் பூரண நலம்பெற கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு திரையுலகினர் மற்றும் பொதுமக்களுக்கு இயக்குநர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பூரண நலம் பெற வேண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

இதையும் படிங்க: பச்சை நிற உடையில் பளீச் கவர்ச்சி... இளசுகளை திண்டாட வைத்த யாஷிகா ஆனந்த்...!

அதில், எஸ்.பி.பி.சார் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கு உங்களுடைய குரலும் ஒரு முக்கியமான காரணம். உங்களுடைய குரலை மறுபடியும் கேட்க வேண்டும். நான் 100 படங்களில் கதாநாயகனாக நடித்ததற்கு உங்களுடைய குரலையும் நான் ஒரு முக்கிய காரணமாக நினைக்கிறேன். நீங்க விரைவில் குணமடைய வேண்டும் என பொது நலத்துடனும், கொஞ்சம் சுயநலத்துடனும் வாழ்த்துறேன். சீக்கிரம் குணமடைந்து வந்துவிடுங்கள் பாலு சார் என வாழ்த்து கூறியுள்ளார்.