திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தவுடன், அடுத்த தேர்தலில் சத்யராஜ் மகளுக்கு பிரச்சாரம் செய்வார் என்ற செய்தி பரவி வருகிறது. இதற்க்கு திவ்யா நேரடியாக பதிலளித்துள்ளார்.

சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான, ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில், தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க மகிழ்மதி" என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். 

சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று திவ்யா விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

திவ்யா அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தவுடன் நடக்கும் அடுத்த தேர்தலில் சத்யராஜ் மகளுக்கு பிரச்சாரம் செய்வார் என்ற செய்தி பரவி வருகிறது. சத்யராஜ் மிகச் சிறந்த புரட்சிகரமான பேச்சாளர் என்பது எல்லோருக்கும் தெரியும் இதைப் பற்றிக் கேட்க திவ்யாவை தொடர்பு கொண்டோம் "அப்பா என் உயிர் தோழன், என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் ஒரு முக்கியமான விஷயம், I am a selfmade, independent person, சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்' என்று திவ்யா சத்யராஜ் கூறினார்.