‘78 ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வில்லன்களின் அடியாட்களாக அறிமுகமாகி,’82ல் மெயின் வில்லனாகி,’86ல் கடலோட்ரக் கவிதைகள் மூலம் கதாநாயகினாகி இன்றுவரை தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராகத் திகழும் சத்யராஜுக்கு இன்று 64 வது பிறந்தநாள். துவக்க காலத்தில் ஆத்திகராக இருந்து தனது தலைகுடி கொட்டியற்காக கோயில் கோவிலாக ஏறி இறங்கியதை சத்யராஜ் பலமேடைகளில் சிரிக்கச்சிரிக்க சொல்லியிருக்கிறார்.

அவரது பிறந்தநாள் நினைவாக அந்தப் பேச்சு இதோ...எனக்குத் தலையிலே முடி கொட்ட ஆரம்பித்தவுடனே , நான் போகாத கோயில் இல்லை, குளம் இல்லை. எல்லா கோவிலுக்கும் போனேன்.சாமி! சாமி! தலைக்குமேலே எப்படியாவது முடியை வளரவை என்று சொல்லி நான் உலகத்தில் உள்ள எல்லாகோவிலுக்கும் சென்று விட்டு வந்துவிட்டேன்.

ஒரு சாமியும் நான் சொன்னப் பேச்சைக் கேட்கவில்லை. தலைக்கு மேலே முடி வளர வில்லை. அப்பொழுது கருப்புச் சட்டைப்போட்ட தொண்டர் ஒருவர் வந்து என்ன பிரச்சினைங்க என்று கேட்டார். இல்லீங்க, தலையில் முடி கொட்டியதுங்க என்று சொன்னேன். அவர் கேட்டார் - நீங்கள் என்ன தொழில் பண்ணுகிறீர்கள் என்று. நான் சினிமாவிலே நடிக்கிறேன் என்று சொன்னேன்.

முடியில்லை என்பதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள்?சினிமாவில் டோப்பாவை வாங்கிவைத்துக் கொள்ளலாமே, தலையில் முடியில்லை என்பதற்காக ஏன் வருத்தப்படுகிறீர்கள் நான் ஒரு சாமியிடம் அழைத்துக் கொண்டு போகின்றேன். அந்த சாமி தலைக்கு மேலே முடியை வளர வைக்குமோ? என்று தெரியவில்லை.தலைக்கு உள்ளே இருக்கிற மூளையை வளரவைக்கும் அப்படின்னு சொல்லி ஒரு சாமிக்கிட்டே அழைத்துக் கொண்டு போனார். அந்த சாமிதான் தந்தை பெரியார் என்ற ஈ.வெ. ராமசாமி . பெரியாருடைய புத்தகங்களைப் படித்தேன்

அந்த உருவத்தைக் கும்பிடவில்லை. கும்பிட வேண்டிய அவசியமில்லை. அவர் சொன்ன விசயங்களையும், அவருடைய தத்துவங்களையும், அவருடைய புத்தகங்களையும் படித்தேன். தலைக்கு மேலே வளருதோ இல்லையோ தலைக்கு உள்ளே வளர்ந்து விட்டது ! "என்பார் சத்யராஜ்.
முகநூலில்,...Chandran Veerasamy