actor sathish who named the contestants of big boss 2
கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்ப்பை பெற்றதோ, அதே அளவிற்கு சீசன் 2 நிகழ்ச்சியும் வரவேற்ப்பை பெரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனினும் சீசன் 2-ல் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை என சமூக வலைத்தளத்தில், ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதேபோல் தொகுப்பாளர் கமல்ஹாசன் கூட நேற்று பிக்பாஸ் வீட்டை ரசிகர்களுக்கு சுற்றி காட்டியபோது, அதே பிக்பாஸ் வீடு ஆனால் பெயிண்ட்டிங் தான் மாறியுள்ளது என்றும் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் காமெடி நடிகர் சதீஷ், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களுடன், சீசன் 2-ல் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களை ஒப்பிட்டு அவர்களுக்கு பெயர் மாற்றியுள்ளார்.
இதுகுறித்து சதீஷ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது...
சென்ராயன் - பரணி
சாரிக் - ஆரவ்
மகத் - ஹரிஷ்
பாலாஜி - வையாபுரி
பொன்னம்பலம் - கஞ்சா கருப்பு
யாஷிகா - ரைசா
மும்தாஜ் - நமீதா
ஆனந்த் வைத்தியநாதன் - சிநேகன்
ஓவியா - ஒவியாவே வந்து விட்டார்
ஜூலி - ஈடு இணையே இல்லை, என்று கூறி அவரை யாருடனு ஒப்பிடவில்லை...
சதீஷின் இந்த கருத்து கணிப்பு ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும் படி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
