கமல் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் சலசலப்புக்கு பஞ்சமே இல்லாமல் நகர்ந்து வருகிறது.

இதற்கிடையே பிக்பாஸ் தொடங்கிய நாள் முதலே.. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளரான கவின், சக போட்டியாளர்களான சாக்ஷி அபிராமி ஷெரின். உள்ளிட்டோரிடம் மிகவும் ஜாலியாக லவ்வர் பாய் போல் பேசி வந்தார்

இந்த நிலையில் மற்ற எல்லாரையும் விட லோஸ்லியாவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது என்பதை யாரோ அவர் காதில் கொளுத்திப்போட உஷாரான கவின் லாஸ்லியா பக்கம் திரும்பினார். இதனை தொடர்ந்து லாஸ்லியா எங்கு போனாலும் அவரிடம் ஓடோடி சென்று பேசுவதே தன்னுடைய வேலையாக வைத்துள்ளார். இதையெல்லாம் ஒரு பார்வையாளராக  பார்க்கும்  நடிகர் சதீஷ், நீண்ட நேரம் குளியலறையை கவின் பயன்படுத்துவதாக கிண்டலாக ஒரு பதிவை போட்டுள்ளார்.

உங்களது பார்வைக்கு இந்த பதிவு..!