நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபல  தனியார்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.  நாளுக்கு நாள் ஏதாவது பரபரப்பை கிளப்பும் போட்டியாளர்களில் பெரும்பாலும் ஜூலியை குறிவைத்தார்கள் ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

ஜல்லிக்கட்டு போராளி என்ற போர்வையில் ஆட்டம் போட்ட  ஜூலிக்கு எதிராக அவரது பெற்றோரும் கோபத்தை காட்டியுள்ளனர். நாளுக்கு நாள் ஜூலி நடந்து கொள்ளும் விதம் அவர் மீதான வெறுப்பை அதிகரிக்க வைத்துள்ளது. இதற்கு முன்பு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட இப்போது எதிர்க்க ஆரம்பித்து உள்ளனர். 

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவுக்கு பார்வையாளர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் ஆதரவு பெருகிவருகிறது. மக்கள் மத்தில் பெருகும் ஆதரவால் ஓவியா எங்கே டைட்டிலை வென்று விடுவாரோ? என்ற பொறாமையின் ஓவியாவை வீழ்த்த குடும்பத்தில் உள்ளவர்கள் உள்ளனர். இதற்கு மத்தியில் ஓவியாவின் செயல்பாடுகள், அவரின் குணங்கள் ஆகியவை மக்கள் அவரை விரும்ப காரணமாகிவிட்டன.

ட்விட்டரில் #Oviya மற்றும் #SaveOviya ஆகிய ஹாஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டில் உள்ளது. இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்று இன்னும் தெரியாத நிலையில் ஓவியாவுக்கு ஆதரவாக லட்சக்கணக்கில் ஓட்டுகள் குவிந்து வருகிறதாம்.

ஜூலியே பிக் பாஸில் வெல்வார் என்று முதலில் ஆதரவு கரம் நீட்டிய நடிகர் சதிஷ் ஓவியாவுக்கு ஆதரவாக ட்விட்டியுள்ளார். "ஆர்ட் டைரக்டர் வந்து பிக்பாஸ் செட்டையே பிரிச்சி எடுத்துட்டு போர வரைக்கும் ஓவியா அங்கதான் இருப்பார். எனவே அவரை நாமினேட் செய்து உங்கள் நேரத்தை வீணாடிக்காதீர் என்கிறார்.

மற்றொரு ட்விட்டில், ஓவியா நடிக்கிறாங்க- ஜூலி. இது எப்படி இருக்கு தெரியுமா, கஞ்சா கருப்பு என்னை கலாய்க்கிறாருனு கவுண்டமணி சொன்ன மாதிரி இருக்கு. என்று ஓவியாவுக்கு ஆதரவாகவும் ஜூலியை கலாய்த்தும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு இதற்கு இன்னும் பல நாட்கள் இருக்கும் நிலையில், ஜூலி தான் பிக் பாஸில் வெற்றி பெறுவார் என திரைப்பட நகைச்சுவை நடிகர் சதிஷ் டுவிட்டரில் கூறியுள்ளார்.
மேலும், ஜூலி ஜெயிக்க போவதற்கு காரணம் ஆர்த்தி மற்றும் காயத்ரி ரகுராம் தான் எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.