சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்காக பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான இளைஞர்கள் கடந்த ஆறு நாட்களாக போராடி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இந்த போராட்டத்தை கொச்சை படுத்தும் வகையில் பீட்டா அமைபை சேர்ந்த ராதாராஜன் என்பவர் இலவச செக்ஸ் என்றால்கூட இதைவிட அதிகமான இளைஞர்கள் கூடுவார்கள் என்று கூறியிருந்தார். 

இவருடைய இந்த கருத்துக்கு ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இவரை கைது செய்ய வேண்டும் என்றும் நாட்டை விட்டே துரத்த வேண்டும் என்றும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் சதீஷ் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியபோது, 'ராதாராஜன் அவர்களே உங்கள் வீட்டு பெண்கள் மெரீனா வந்தாலும் பாதுகாப்பு கொடுப்பவர்கள் எங்கள் தமிழ் இளளஞர்கள். எங்கள் உணர்வுகளை கொச்சைப்படுத்த வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளார். 

மேலும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் பீட்டாவுக்கு எதிராக போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிராக போராட வைக்க வேண்டாம்' என்றும் நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.