பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று கண்டிப்பாக ஒரு பிரபலம் வெளியியேறுவது உறுதி. ஆனால் அது யார் என்கிற குழப்பம் தான் தற்போது ரசிகர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நிகழ்ச்சியின் முடிவில், இசை வித்வான் மோகன் வைத்தியா, காப்பாற்றபட்டதாக கமல் தெரிவித்தார். இதை தொடர்ந்து இன்று வெளியான ப்ரோமோவில், நடிகை மதுமிதாவும் மக்களின் வாக்குகள் அடிப்படையில் காப்பாற்றப்பட்டதாக கூறினார்.

இதைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், காப்பாற்ற பட்டவர் யார் என்கிற தகவல் பிக்பாஸ் வீட்டிலேயே உள்ளதாக கூறுகிறார் கமல். இதைதொடந்து அனைவரும் பிக்பாஸ் வீடு முழுக்க, காப்பாற்ற பட்ட பிரபலத்தின் பெயர் இடம்பெற்றுள்ள அட்டையை தேடுகிறார்கள். 

நடிகர் சரவணன் அதனை கண்டுபிடித்து அதற்குள் அவருடைய பெயர் உள்ளதை படிக்கிறார். ஆனால் அவர் தான் தான் இந்த வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுகிறோம் என சந்தோஷத்தில் இருந்த போது, இது காப்பாற்ற பட்டவர் பெயர் என கூறுகிறார் கமல்.

பின், சார் என்னுடைய இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் விட்டுட்டு வந்துள்ளேன் என கூறுகிறார். அப்போது கமல் அப்போ உங்களுக்கு உங்களுடைய மகன் பிரச்சனை அல்ல என கூற பிக்பாஸ் அரங்கமே சிரிப்பில் மூழ்குகிறது. 

இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கையில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட ஐந்து நபர்களில் மோகன் வைத்தியா, மது, சரவணன் ஆகியோர் காப்பாற்றபட்டுவிட்டனர். தற்போது இந்த லிஸ்டில் உள்ளவர்கள் வனிதா மற்றும் மீரா ஆகியோர் தான். இவர்களில் மீராவை விட வனிதாவே மக்களிடம் அதிக எதிர்ப்பை சம்பாதித்துள்ளதால், வனிதா வெளியேறவே வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இதிலும் பிக்பாஸ் ஏதாவது ட்விஸ்ட் வைப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.