’முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்துக்காக  இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்’ என்று கதறி அழுதபடி பிக்பாஸ் சீஸன் 3’ நிகழ்ச்சியில் பருத்தி வீரன் சரவணன் பேசியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒவ்வொரு நாளும்  விறுவிறுப்பாக கூட்டப்பட்டு  வருகிறது. இதில் நேற்று முதல் ஹவுஸ் மேட்ஸ்க்கு டாஸ்க் வழங்கப்பட்டது. முதல் டாஸ்க்கே போட்டியாளர்களை சரி ரசிகர்களையும் சரி கண் கலங்க வைத்துவிட்டது. அது என்னவென்றால் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் நடந்த மிக கசப்பான விஷயம் குறித்து பகிர்ந்து கொள்ளும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. 

அந்த வகையில் அதில் பேசிய மோகன் வைத்யா மற்றும் ரேஷ்மா தங்களது வாழ்க்கையில் நடந்த மிக துயரமான நிகழ்வை பகிர்ந்து கொண்டு பிக் பாஸ் வீட்டிலிருந்த அனைவரையும் அழவைத்தனர்.இந்த நிலையில் இன்றைக்கான கடைசி புரோமோ வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சரவணன் கண்ணீர் விட்டு தனது வாழ்வில் நடந்த சோதனையைப் பகிர்ந்து கொண்டார். அதாவது, தனது முதல் மனைவிக்குக் குழந்தை இல்லாத காரணத்தினால் அவரே முன்னின்று இரண்டாம் கல்யாணம் செய்துவைத்ததாக கூறியுள்ளார். பெண்ணின் நிழலில் தான் வாழ்ந்தேன். இனி இரண்டாம் பாதி மகனுக்காக என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

முதல் மனைவிக்கு குழந்தை இல்லாவிட்டால் ஆதரவற்ற குழந்தைகள் யாரையாவது தத்து எடுத்திருக்கலாமே என்னதான் முதல் மனைவி சம்மதித்திருந்தாலும் சரவணன் இடண்டாவது திருமணம் செய்தது சட்டப்படி குற்றம் என்று பஞ்சாயத்துகள் துவங்கியிருக்கின்றன.