தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தின் அந்நிய முதலீடு செய்வதை வலியுறுத்தும் விதமாக நாளை வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.  அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய சொல்வதே இந்த பயணத்தின் குறிக்கோள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனால் இவரை சந்தித்து அரசியல் தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவருடைய சந்திப்பு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் நடைபெற்றது. இதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், முதலமைச்சரை சந்தித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். 

நாளை தன்னுடைய சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் முதல்வர் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி, தமிழகம் திரும்ப உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.