சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த 'டீக்கடை பெஞ்ச்' என்கிற காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி பின், 'லொள்ளு சபா', 'சகலை VS ரகளை' போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய காமெடி பேச்சால் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகர் சந்தானம்.

இதைதொடர்ந்த்து, நடிகர் சிம்பு நடிப்பில், 2004 ஆம் ஆண்டு வெளியான 'மன்மதன்' படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானார். பின் சச்சின்,  சிவா மனசுல சக்தி,  பாஸ் என்கிற பாஸ்கரன்,  சிறுத்தை,  உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய ஈடுஇணையற்ற காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்.

இவரின் காமெடி நடிப்புக்கு,  தற்போது கூட தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காமெடி நடிகர் என்பதையும் தாண்டி, கடந்த சில வருடங்களாக ஹீரோ கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'தில்லுக்கு துட்டு 2  ' திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

தற்போது 'A1 ' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி புது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் 'டகால்டி' என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் சந்தானத்தின் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.

இந்த புகைப்படத்தில் உடல் மெலிந்து, முகத்தில் பொலிவற்று ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் சந்தானம். எனவே இவரின் உடல்நிலை ஏதேனும் சரி இல்லையா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அதிர்ச்சியாக்கிய அந்த புகைப்படம் இதோ: