ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் 'ஏ1'.  இந்த படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து அதே கூட்டணி ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தில் ஒன்றிணைந்தது. சமீபத்தில் அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததை, இதையடுத்து அடுத்த படப்பிடிப்பில் சந்தானம் இணைந்துள்ளார். 


ஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில்  சந்தானம் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லுசபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதன்முறையாக சந்தானம் படத்தில் சாம் சி.எஸ். இசையமைக்க உள்ளார். தற்போது ஷூட்டிங் கும்பகோணத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.


இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அறிமுக இயக்குநராக இணைந்துள்ளார் ஸ்ரீனிவாச ராவ். இப்படத்தைப் பற்றி ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், “ஒரு தந்தைக்கும் - மகனுக்கும் இடையே நடந்த சம்பவங்களையும், அவர்கள் கடந்துவந்த உணர்வுப் போராட்டங்களையும் இப்படம் பிரதிபலிக்கும் என்பதால் படத்தைக் காண்போர் தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஒன்றிப்போக முடியும்.மேலும், அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜனரஞ்சகமான கதையாக உருவாக்கப்பட்டுள்ளதாக” கூறியுள்ளார்.