​எழுத்தாளரும் புதுமுக இயக்குநருமான கார்த்திக் யோகி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட் உருவாகி திரைப்படம் “டிக்கிலோனா”. நடிகர் சந்தானத்துடன்,  சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவருடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்கியுள்ளது. இது எல்லாம் போதாது என்று அனகா, ஷிரின் என்ற இரண்டு ஹீரோயின்கள் வேறு சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளனர். 

“பலூன்” படத்தை தயாரித்த சினிஷ் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த மே மாத இறுதியில் இந்த படத்தின் 3 கெட்டப்புகள் போஸ்டர்களாக வெளியாகி தாறுமாறு வைரலாகின. 

 

இதையும் படிங்க:  டீப் நெக் ஓபனில் கவர்ச்சி அதிர்ச்சி... வைரலாகும் யாஷிகா ஆனந்தின் ஓவர் தாராளம்...!

சந்தானம் - யோகிபாபு காம்பினேஷன் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வேற லெவலுக்கு இருந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. டைம் டிராவல் சம்பந்தமான இந்த படத்தில் டிரெய்லரின் முதல் காட்சி முதல் கடைசி காட்சி வரை இடம் பெறும் வசனங்களில் கேஜிஎஃப் படத்தை மரண மாஸாக கலாய்த்துள்ளனர். அதுவும் கேஜிஎஃப் படத்திற்கு பின்னணி பேசிய அதே நிழல்கள் ரவி குரலில், பார்க்க செம்ம காமெடியாக இருக்கும் டிக்கிலோனா டிரெய்லர் இதோ...