விஜய்யின் கோபவம் இப்படி பட்டதா? அனைவர் மத்தியில் மன்னிப்பு கேட்டும் கண்டித்தார்! உண்மையை கூறிய சஞ்சீவ்!

ஒரு சண்டையால் நடிகர் விஜய், தம்மிடம் 6 மாதம் பேசவில்லை என்று அவரது நெருங்கிய நண்பரும், திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகருமான சஞ்சீவ் கூறியுள்ளார்.

ஆன்லைன் செய்தி தளம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் விஜய் உடனான சண்டை குறித்து மனம் திறந்தார். ஆனால் என்ன பிரச்சனைக்காக சண்டை ஏற்பட்டது என்பதைக் கூற அவர் மறுத்து விட்டார். நடிகர் விஜய் கோபப்படுகிறார் என்றால் அதற்கு காரணம் நானாக மட்டுமே இருக்க முடியும் என்று புன்னகையுடன் தெரிவித்த சஞ்சீவ் பின்னர் விஜயின் கோபம் குறித்து பேசத் தொடங்கினார்.
 
நண்பர் பட்டாளத்துடன் உணவு விருந்தில் விஜயை சந்தித்த போது ஒரு பிரச்சனை தொடர்பாக தனக்கும், விஜய்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது விஜய் கோபமுற்றதாகவும் தெரிவித்தார் சஞ்சீவ். ஆனால் பிரச்சனை என்னவென்று முழுமையாக தெரிந்து கொள்ளாமல் விஜயிடம் அதிகம் பேசி விட்டதால் விஜய் கோபம் அடைந்ததாக கூறினார்.

அப்போது எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த விஜய், மேஜையை வேகமாக அடித்து விட்டு அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு விட்டதாக சஞ்வீவ் குறிப்பிட்டார். விஜய்க்கு கோபம் வந்து விட்டால் அவர் கூச்சலிடவோ, அல்லது பேசவோ மாட்டார் என்றும் அவரது அமைதியே தங்களைக் கொன்று விடும் என்றும் சஞ்சீவ் கூறினார். 

அடுத்த 6 மாதம் தங்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லை என்று கூறிய அவர், ஆனால் ஒரு பிரச்சனையின் இரு பக்கத்தையும் தெரிந்து கொள்ளாமல் பேசக் கூடாது என்பதை அப்போது உணர்ந்து விட்டதாக தெரிவித்தார்.


 
இதன் பின்னர் தனது தவறை உணர்ந்துகொண்டதாகவும், தொலைக்காட்சி பேட்டி வாயிலாக  விஜயிடம் வருத்தம் தெரிவித்ததை நினைவு கூர்ந்த சஞ்வீவ், மறுகணமே விஜய் செல்போனில் அழைத்து, நீ எதற்காக என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும், அதுவும் பொதுமக்கள் பார்க்கும் தொலைக்காட்சி பேட்டியில் என்று செல்லமாக கண்டித்ததையும் சஞ்சீவ் குறிப்பிட்டார்.