படங்கள் ரிலீஸாகிறதோ இல்லையோ ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் தொடர்ந்து நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். அதிலும் இவர் நடித்து முடித்திருக்கும் அரை டஜன் அதிரடி ஆக்‌ஷன் படங்கள் ரிலீஸாகாமல் காத்துக்கிடக்க தற்போது நேரடி தெலுங்குப் படம் ஒன்றிலும் வில்லியாக நடித்திருக்கிறார். ஆனால் அதிர்ஷடவசமாக அப்படம் இந்த வாரம் வெள்ளியன்று ரிலீஸாகிறது.

’தெனாலிராமகிருஷ்ணா , பி.ஏ  .பி.எல்’ என்கிற அப்படத்தில் ராசியில்லா ராஜா சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி நடித்திருக்கிறார். படத்தின் வில்லியாக வெளுத்து வாங்கியிருப்பவர் நம்ம வரலட்சுமியேதான். இப்படத்தின் புரமோஷன் வேலைகள் அனைத்து சோஷியல் மீடியாக்களிலும் மிகத் தீவிரமாக நடந்துவர, படத்தின் ஹீரோவான சந்தீப் வரலட்சுமியை டேக் செய்து,...அது எப்பிடி மேடம் எப்ப எந்த ஆங்கிள்ல பாத்தாலும் ஒரு  மெகா டான் மாதிரியே இருக்கீங்க? என்று தெலுங்கு மொழியில் கிண்டலாகப் பதிவிட்டிருந்தார்.

சந்தீப்பின் அப்பதிவுக்கு பதிலளித்த வரலட்சுமி,...ஷட் அப் ராஸ்கல் என்று செல்லமாக மிரட்டிவிட்டு ‘லொல்’என்று அவரை கூல் பண்ணவும் செய்திருந்தார்.தமிழில் ராசியில்லாத ராணியாக இருக்கும் வரலட்சுமியை தெலுங்கு ரசிகர்களாவது ஏற்றுக்கொள்கிறார்களாக என்று தெரிந்துகொள்ள 4 நாட்கள் காத்திருக்க வேண்டும்.