actor samykannu pass away
மூத்த தமிழ்த்திரைப்பட நடிகர் சாமிகக்கண்ணு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான எம். ஜி.ஆர், சிவாஜி, ரஜினி,கமல் முதல் இன்றைய தலைமுறை நடிகர்களின் படங்களிலும் குணசித்திர நடிகராக 400க்கு மேல் படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் அவதி பட்டு வந்த இவர், நேற்று மாலை சென்னையில் காலமானார்.அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
எட்டு வயதிலிருந்து மேடைநாடக கம்பெனிகளில் பனியாற்றி 1954 ல் 'புதுயுகம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர். கே.எஸ். கோபாலகிருஷ்ணண்,எஸ் பி முத்துராமன் ,மாதவன் ,மற்றும் மகேந்திரன்,ராஜ்கிரண்,மற்றும் பல இயக்குனர்களிடம் பணிபுரிந்தவர்.
மேலும் பட்டிக்காடா பட்டணமா,பாட்டும் பரதமும்,நான்,அன்னக்கிளி,உரிமைக்குரல், ஜானி, முள்ளும் மலரும்,போக்கிரிராஜா,உதிரிப்பூக்கள்,போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
