நடிகர் ஜீவாவை கதைநாயகனாகக் கொண்டு ராஜூ முருகன் இயக்கி விரைவில் திரைக்கு வர உள்ள ‘ஜிப்ஸி’படத்துக்கு எதிராக தனது ட்விட்டர் பக்கத்தில் விஷம் கக்கியுள்ளார் காமெடி அரசியல்வாதியும் நடிகருமான எஸ்.வி.சேகர். இப்பதிவுக்கு எதிராக அவரை பின்னூட்டங்களில் வச்சு செய்கிறார்கள் அவரது ஃபாலோயர்கள்.

‘குக்கூ’,’ஜோக்கர்’படங்களுக்கு அடுத்தபடியாக ராஜூ முருகன் இயக்கி முடித்திருக்கும் படம் ‘ஜிப்ஸி’.ஜீவாவின் ஜோடியாக நடாஷா சிங் நடித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். தனது ‘ஜோக்கர்’படத்திலேயே மத்திய பா.ஜ.க.அரசை கடுமையாக விமர்சித்திருந்த ராஜூ முருகன் ‘ஜிப்ஸி’படத்திலும் மதவெறிக்கெதிராக சில காட்சிகளை வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதனால் அப்படத்தின் மீது சில மதவெறியர்களுக்கு ஒரு கண் இருந்துகொண்டே இருந்தது.

இந்நிலையில் இப்படம் சென்சாருக்குச் சென்று சந்தித்த நெருக்கடிகள் குறித்து மயிலாப்பூர் அரசியல்வாதி எஸ்.வி.சேகர் ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில்,...S.VE.SHEKHER🇮🇳 @SVESHEKHER
ஜிப்சி திரைப்படத்தில் என்ன பிரச்சினை⁉️இரு முறை EC&RC சென்சார் மறுக்கப்பட்டு Tribunal செல்ல அறிவுறுத்தப்பட்டதா⁉️RSS சித்தாந்தங்களை கேவலப்படுத்தும் காட்சிகளும். முதல்வர் யோகி அவர்கள் getup போட்டு அவர் பெயரையே பயன் படுத்தியதும், இந்துக்கலவர காட்சிகளும் காரணமா⁉️தயாரிப்பாளர் திமுகவா⁉️ என்று விஷம் கக்கியுள்ளார்.

அவரது பதிவுக்குக் கீழே உள்ள கமெண்டுகளில்,...திமுக கைக்கூலி ...பாகிஸ்தான் கைக்கூலி...ஆன்டி இந்தியன்...இத தவிர ஏதும் தெரியாத மாட்டு மூத்திரம் குடிப்பவர்களுக்கு..கருத்தை கருத்தால் எதிர்க்கொள்ள சங்கிகளுக்கும் தெரியாது சங்பரிவார் போன்ற தீவிரவாத அமைப்புக்கும் தெரியாது ..என்பது போன்ற மிகக் கடுமையான பதில்கள் வரிசை கட்டிவருகின்றன.