'பாஜக கட்சி ஆபீஸ்க்கும் போனா ஏதாவது தேறும்னு போனா இப்படித்தான் தேறும்.. செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாய்க்கு கோவில்ல என்ன வேலை⁉️ என்று சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷை மிகவும் தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஷ் மானுஷ், நேற்று  ஃபேஸ்புக்கில் லைவ் அடித்தபடி காஷ்மீர் விவகாரம் குறித்து இப்போது  பாஜகவினரிடம் கேட்கலாம் என்றபடி உள்ளே நுழைந்தார். அப்போது பாஜக தொண்டர்களிடம் சென்ற அவர் மணிகண்டன் என்பவர் மெசேஜ்களில் எனக்கு அரிவாளையும், கத்தியையும் அனுப்புகிறார். அவருக்கு என்ன தேவை? காஷ்மீர் பிரச்னை குறித்து விளக்கமளியுங்கள்? எனக் கேட்கிறார். அதற்கு உனக்கு எதற்கு பதில் அளிக்க வேண்டும் என பாஜகவினர் கேட்க, ‘நீங்கள் தான் ஆளும் கட்சியாக இருக்கிறீர்கள்? பதில், சொல்லியே ஆக வேண்டும்? என பியூஷ் மானுஷ் கேட்கிறார். பப்ளிக் கேள்வி கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்? என்கிறார்.மேலும் பியூஷ் மானுஷ் தொடர்ந்து பேசிக்கொண்டே போக வெறுப்படைந்த பாஜக தொண்டர்கள் ஒன்று கூடி அடிக்கத் தொடங்கினர். பின்னர் காவல்துறையினர் வந்து பியூஷ் மானுஷை மீட்டுச் சென்றனர். 

பியூஷ் மனுஷ் தாக்கப்பட்ட செய்தி பெரும் பரபரப்பாகியுள்ள நிலையில் பா.ஜ.க.வினர் அவரை மிகக் கடுமையாகத் தாக்கி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் எஸ்.வி.சேகர்,..S.VE.SHEKHER🇮🇳@SVESHEKHER..ஏதோ துணிக்கடைக்குள்ள CCTV இருக்கிறது தெரியாம போய் மிரட்டினா ஏமாந்து போய் 7லட்சம் குடுப்பாங்க. காட்டுதும் விடுவாங்க. அதேபோல பாஜக கட்சி ஆபீஸ்க்கும் போனா ஏதாவது தேறும்னு போனா இப்படித்தான் தேறும்.. 💪💪செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத நாய்க்கு கோவில்ல என்ன வேலை⁉️ என்று மிகவும் கேவலமாக பியூஷ் மனுஷை ஒரு நாயுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

மற்றொர் பதிவில் பா.ஜ.க.தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,...Dr Tamilisai Soundararajan@DrTamilisaiBJP முகநூலில் பதிவிட்டுவிட்டு சேலம் பாஜக அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து பாஜக தொண்டர்களைத்தாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்திய  பியூஷ் மனுஷ் போன்ற சமூக விரோத செயல்பாட்டாளர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து பொது அமைதி காக்கவேண்டும் என்று எழுதியுள்ளார்.