Asianet News TamilAsianet News Tamil

நடிகர் ரியாஸ் கான் மகனுக்கு விரைவில் திருமணம்! ஷாரிக்கின் வருங்கால மனைவி யாரு தெரியுமா?

சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஷாரிக்கின் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

Actor Riyaz Khan's son is getting married soon! Do you know who is Shariq's future wife? sgb
Author
First Published Aug 4, 2024, 11:49 PM IST | Last Updated Aug 4, 2024, 11:53 PM IST

ரியாஸ் கான் - உமா ரியாஸ் கான் தம்பதியின் மகன் ஷாரிக். பிக்பாஸ் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர். இவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கட்டுமஸ்தான உடலுடன் இருக்கும் நடிகர் ரியாஸ் கான் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தோன்றி தன் திறமையைக் காட்டியுள்ளார். நடிகை கமலா காமேஷின் மகளான உமாவை திருமணம் செய்துகொண்டார்.

உமா ரியாஸ் விஜய் டீவியில் குக் வித் கோமாளி முதல் சீசனில் கலந்துகொண்டிருக்கிறார். கடைசி வரை முன்னேறிய அவர்  பைனலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

ரியாஸ் - உமா தம்பதியின் மகன் ஷாரிக் நேற்று இந்த நேரம், ரிசார்ட் போன்ற சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஷாரிக் போட்டியாளராகப் பங்கேற்றார். 49 நாட்களிலேயே எலிமினேட் செய்யப்பட்டார்.

டோலிவுட்டில் அந்த ஹீரோவுடன் நடித்தால் அவ்வளவுதான்.. எல்லா ஹீரோயின்களுக்கும் கெரியரே போச்சு!

பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷாரிக் மீண்டும் 21 நாட்களில் வெளியே சென்றார். பிறகு ஒரு நடன நிகழ்ச்சியில் அனிதா சம்பத்துடன் சேர்ந்து பங்கேற்று டைட்டில் வின்னராக வந்தார். இந்நிலையில் 29 வயதாகும் ஷாரிக்கிற்கு ஆகஸ்டு 8ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஷாரிக்கின் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. பிறகு நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரைத்துறையினர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

ஷாரிக்கின் மனைவியாகப் போகும் பெண் யார் என்பது பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. ஷாரிக்கின் திருமணம் குறித்த தகவலே உண்மையா அல்லது வதந்தியா என உறுதியாக தெரியவரவில்லை. சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் உமா ரியாஸ் மகனின் திருமணம் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பது சந்தேகத்தை அதிகமாக்குகிறது.

வெறித்தனமான ஐபோன் ரசிகரின் திருமண அழைப்பிதழ்! ட்ரெண்டிங்கில் கலக்கும் விசாகப்பட்டினம் ஜோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios