'பாகுபலி' திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து, உலக மக்கள் அனைவரையும் கவனிக்கப்பட வைத்தவர் நடிகர் ராணா. இவர் ஏற்கனவே தமிழில், அஜித் நடித்த ஆரம்பம், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 

இந்நிலையில் இவர்,  தமிழில் ஒரு படம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நானி மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஜெர்சி' படத்தை, ராணா தமிழில் தயாரிக்க உள்ளார்.

அதே போல் சமந்தா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள ஓ பேபி படத்தையும் ஆலியா பட்டை கதாநாயகியாக வைத்து இந்தியில் ராணா ரீமேக் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 'ஓபேபி' படத்தின் இந்தி ரீமேக்கில், ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.