பல ரியாலிட்டி ஷோக்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்தாலும், விஜய் தொலைக்காட்சியில் 100 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி மவுசு தான். ஆரம்பத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் கிளம்பினாலும், போக போக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்க துவங்கினர்.

தமிழில் பிக்பாஸ் இரண்டு சீசன் முடித்துள்ள நிலையில். ஜூன் 23 ஆம் தேதி முதல், பிக்பாஸ் மூன்றாவது சீசன் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியையும், நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில், 80 மற்றும் 90 களில் பல படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகர் ராம்கி கலந்து கொண்டு விளையாட உள்ளதாக ஒரு தகவல் பரவியது. இந்த குறித்து ஊடகம் ஒன்று அவரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அதனை ராம்கி முற்றிலும் மறுத்துள்ளார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஆரம்ப பணிகள் கடந்த சில மாதமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அவை இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் பற்றிய அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்கப்படுகிறது.