Asianet News TamilAsianet News Tamil

நடிகர் ரமேஷ் திலக்கிற்கு அடித்த செம யோகம்...! 

actor ramesh tilak join visuvasam movie
actor ramesh tilak join visuvasam movie
Author
First Published May 11, 2018, 8:28 PM IST


பிரபல வானொலியில் தொகுப்பாளராக இருந்த, ரமேஷ் திலக் சின்னத்திரையில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' சீரியல் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி காமெடியன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அண்மையில் தான், தன்னுடைய காதலி நவலட்சுமியை திருமணமும் செய்துக்கொண்டார். தற்போது இவருக்கு செம யோகம் அடித்துள்ளது என்று தான் கூற வேண்டும். actor ramesh tilak join visuvasam movie

தல அஜித், நடித்து வரும் "விசுவாசம்" திரைப்படத்தில் தற்போது ரமேஷ் திலக் இணைந்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் நடிகர் ரோபோ சங்கர், யோகிபாபு, தம்பி ராமையா, மற்றும் இமான் அண்ணாச்சி உள்ளிட்ட காமெடி நடிகர்கள் இணைந்துள்ள நிலையில் இவரும் புதிதாக இணைந்துள்ளார்.

இதனை உறுதி படுத்தும் விதத்தில், ரமேஷ் திலக் அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். actor ramesh tilak join visuvasam movie

கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் தொடர்ந்து பல காமெடி நடிகர்கள் இணைந்துக்கொண்டே போவதால், கண்டிப்பாக இந்த படத்தில் காமெடிக்கு சற்றும் பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios