'மங்காத்தா' படத்தில் சிறு கதாப்பாத்திரம் மூலம் அறிமுகமான ரமேஷ் திலக், தொடந்து சூது கவ்வும், காக்கா முட்டை, கபாலி, விசுவாசம், என  நல்ல படங்களை தேர்வு செய்து, காமெடியனாக மட்டும் இல்லாமல், குணச்சித்திர நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவர் விரைவில் ஆரம்பமாக உள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாட உள்ளதாக ஒரு தகவல்  பரவியது.

இதற்கு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதன் மூலம் பதில் கொடுத்துள்ளார் ரமேஷ் திலக். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்... "நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் வெளியானது இது முற்றிலும் வதந்தி என கூறியுள்ளார்". இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.