உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரேநாளில் 5,560 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,25,420 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக திரைத்துறையில் புகுந்து விளையாடும் கொரோனா தொற்று பல்வேறு முன்னணி பிரபலங்களையும் சோதித்து வருகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் 80ஸ் கிட்ஸ்களின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு மாப்பிள்ளை என பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றவர் ராமராஜன். ஹீரோ என்றாலே மடிப்பு கலையாத வேட்டி, சட்டையில் வலம் வர வேண்டும் என்ற வரலாற்றை மாற்றி, அரை டவுசரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுந்தவர். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடை வைத்துள்ளது. இதையடுத்து கிண்டி கிங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது