Asianet News TamilAsianet News Tamil

பொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகர் !! அபராதத்துடன் போலீஸ் கடும் எச்சரிக்கை !!

தெலங்கானா மாநிலம் ஹைதிராபாத்தில் பொது இடத்தில் சிகரெட் பிடித்ததற்காக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராமிற்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. 

actor ram have cigarett in public place
Author
Hyderabad, First Published Jun 25, 2019, 11:39 PM IST

பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் ராம், இயக்குனர் பூரி ஜெகன்னாத் தயாரிப்பில் `ஸ்மார்ட் சங்கர்’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் கடந்த 2 நாட்களாக ஹைதராபாத் சார்மினார் அருகே நடைபெற்று வருகிறது. 

actor ram have cigarett in public place

நேற்று குல்ஜார் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பு இடைவேளையில் நடிகர்  ராம் சிகரெட் பிடித்தாக கூறப்படுகிறது. 

actor ram have cigarett in public place

இதனை பார்த்த சார்மினார் காவல் நிலைய எஸ்ஐ பண்டரி, நடிகர் ராம் மீது 2003 சட்டப்பிரிவு 4ன் படி பொது இடத்திலும், கூட்டம் அதிகம் உள்ள இடத்திலும் சிகரெட் பிடித்ததற்காக ரூ.200 அபராதம் விதித்தார்.
 
இதையடுத்து நடிகர் ராம் அபராத தொகையை உடனடியாக செலுத்தினார். இருப்பினும் சினிமா படப்பிடிப்பின் ஒரு காட்சியாக நடிகர் ராம் சிகரெட் பிடித்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர். 

actor ram have cigarett in public place

ஆனால் அதனை போலீசார் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து படப்பிடிப்பில் சிகரெட் பிடிக்கும் காட்சியும் ரத்து செய்ய வேண்டிய நிலைக்கு படக்குழுவினர் தள்ளப்பட்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios