சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ஏற்கனவே, தமிழக மக்களுக்கு தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை கூறிய நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு, வெளிநாட்டில் குடும்பங்களை பிரிந்து கஷ்டப்பட்டு வரும் தமிழர்களுக்கு உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது... வெளிநாடுகளில் வாழும் இந்திய தமிழர்களுக்கு இந்த புதிய ஆண்டு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று, இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.

இந்த கொரோனா வைரஸ்சால் முழு உலகமே பாதிப்படைந்துள்ளது, இதற்க்கு இந்தியாவும், தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. உங்களை பிரிந்து வாழும் , உங்கள் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, சதா நேரமும் உங்களை பற்றி தான் சிந்தனை, உங்களை பற்றி தான் கவலை.
நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ அந்த நாட்டின் அரசு, எந்த கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்களோ... அதை நீங்கள் தவறாமல் கடைபிடித்து, உங்களை நீங்கள் பாதுகாத்து கொள்ளுங்கள்.

இதுதான் உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கிற மிகப்பெரிய பரிசு. நலமுடன் வாழுங்கள். கவலை படாதீர்கள் இதுவும் கடந்து போகும் என கூறியுள்ளார்.
அந்த வீடியோ இதோ:
Scroll to load tweet…
Add Asianetnews Tamil as a Preferred Source

